ADDED : ஏப் 18, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
அரச்சலுாரை அடுத்த வடபழனியை சேர்ந்தவர் பழனிசாமி, 45; அதே பகுதியில் ஒரு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த, 14ல் கனமழையால், ஆலையின் கூரையான சிமென்ட் சீட் சேதமானது. மறுநாள் காலை கூரையை சரி செய்ய, கிரேன் வாகனத்தின் மூலம் பழனிசாமி, வடமாநிலத்தை சேர்ந்த கோபால் கூரை மீது ஏறினர். அப்போது சிமென்ட் சீட் உடைந்ததில் இருவரும் தரையில் விழுந்து படுகாயமடைந்தனர். ஆலை நிர்வாகத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழனிசாமி மனைவி நித்யா புகாரின்படி, அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

