ADDED : ஏப் 03, 2026 03:43 AM
அ நிறம் | அளவு
புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த நொச்சிகுட்டையை சேர்ந்தவர் சின்னராஜ், 56; கூலி தொழிலாளி. எக்ஸெல் சூப்பர் மொபட்டில் அவிநாசி சாலையில் நேற்று மாலை சென்றார்.
என்.ஆலம்பாளையம் பிரிவு அருகே கோழி பாரம் ஏற்றுவதற்காக சென்ற பிக்-அப் சரக்கு வாகனம், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிரே சின்னராஜ் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட சின்னராஜ் சம்பவ இடத்தில் பலியானார். சரக்கு வாகன டிரைவரான அவிநாசியை சேர்ந்த சந்திர நந்தகுமாரிடம், 30, புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
