/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆங்கிள் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பலி
/
ஆங்கிள் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பலி
ADDED : நவ 27, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆங்கிள் சரிந்து விழுந்த
விபத்தில் தொழிலாளி பலி
கோபி, நவ. 27-
கோபி அருகே குருமம்பாளையத்தை சேர்ந்தவர் கொமரசாமி, 64, கூலி தொழிலாளி. கோபி அருகே கோரமடை பிரிவை சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டில், நேற்று முன்தினம் மாலை, ஓடு வேயும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக சுவரில் பதித்திருந்த ஆங்கிள் சரிந்ததால், அதன் அடியில் நின்றிருந்த கொமரசாமி பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

