தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு


ADDED : அக் 29, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கவுந்தப்பாடி அருகே விராலிமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 51, கட்டட தொழிலாளி; இவரின் மனைவி சித்ரா, 42; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 2017ல் வீடு கட்ட, கோபியில் உள்ள பைனான்சில், சிவக்குமார் எட்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

மாத தவணையாக, 8,000 ரூபாய் செலுத்தி வந்தார். தவணையை முறையாக கட்ட முடியாததால் மனவேதனை அடைந்தார். கடந்த, 26ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மனைவி சித்ரா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us