ADDED : அக் 12, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:பர்கூர்மலை தாமரைக்கரை அடுத்த ஒந்தனையை சேர்ந்தவர் மூர்த்தி, 40, கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமாக மூன்று மாடுகள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய்க்க ஓட்டி சென்றார். மாலை, 5:00 மணிக்கு மாடுகளுடன் வீடு திரும்பினார்.
அப்போது வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, மூர்த்தியை தாக்கி துாக்கி வீசியது. அவர் சத்தமிடவே அங்கிருந்தவர்கள் திரண்டு யானையை விரட்டினர். யானை துாக்கி வீசியதில் தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த மூர்த்தியை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.