ADDED : மார் 13, 2026 04:40 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத், 30; தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில், பைக்கில் நேற்று முன்-தினம் இரவு, 8:45 மணியளவில் சென்றார். எதிர் திசையில் தேங்காய் மஞ்சி லோடு ஏற்றிவந்த லாரி மீது, பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். விபத்து குறித்தூு தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பா.ஜ. தெருமுனை பிரசாரம்பெருந்துறை: பெருந்துறை நகர பா.ஜ., பட்டியல் அணி சார்பில், பெருந்துறை ஒன்றியம் மடத்துபாளையம் மற்றும் கருமாண்டி செல்லிபா-ளையம், பாலன் நகர் பகுதியில், தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன் தலைமை வகித்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பேசினார். பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

