ADDED : மார் 24, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல், 29; அதே பகுதியை சேர்ந்தவர் தீபக், 27; இருவரும் வாட்டர் ப்ரூபிங் தொழிலாளர்கள்.
கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோவிலுக்கு ஹோண்டா யுனிகான் பைக்கில், நேற்று முன்தினம் புறப்பட்டனர். வெள்ளகோவில் அருகே அய்யம்பாளையத்தில் சென்றபோது, நிலை தடுமாறிய பைக் புளியமரத்தின் மீது மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராகுல் இறந்து விட்டார். தீபக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
