ADDED : மே 05, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தர்மபுரி
மாவட்டம் அரூரை சேர்ந்தவர் தனபால், 65; ஈரோடு,
தண்ணீர்பந்தல்பாளையம், செங்குந்தர் நகரில், வீடு கட்டும் பணியில்
ஈடுபட்டிருந்தார்.
பூச்சு வேலைக்காக 6 அடி உயரத்துக்கு மரத்தால்
சாரம் கட்டப்பட்டிருந்தது. இதில் நின்று நேற்று கான்கிரீட் கலவை
பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாரம்
சரிந்து தனபால் தலை மீதும், அருகில் இருந்த நான்கு தொழிலாளர் மீதும்
விழுந்தது. சக தொழிலாளர்கள் தனபாலை மீட்டு ஈரோடு அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. காயமடைந்த நான்கு
தொழிலாளர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்ந்தனர். ஈரோடு வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.