ADDED : செப் 29, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில், நேற்று முன்தினம் மாலை தனியார் கல்லூரி எதிரே, நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த தனியார் சாலை கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கான லாரி, சாலை ஓரம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
அப்போது காங்கேயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி, வேகமாக சென்ற கிரசர் லாரி மோதியதில் தண்ணீர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு லாரியில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் காயமடைந்தனர்.சாலையில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர், 37, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.