ADDED : ஜன 02, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை விபத்தில்தொழிலாளி பலி
காங்கேயம், ஜன. 2-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஜோதிநாதன், 33, இவரது நண்பர் கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 29. இவர்கள் இருவரும் தாராபுரத்தில் இருந்து, ஊதியூர் அருகே கட்டட வேலைக்கு வந்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து காங்கேயம் தாராபுரம் ரோட்டில், யூனிகான் பைக்கில் வீடு திரும்பினர். அப்போது, திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி, பைக் மீது மோதியது. இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், லாரியின் சக்கரம் லட்சுமணனின் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜோதிநாதனை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

