தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொழிலாளர்களை மிரட்டியவர் கைது

தொழிலாளர்களை மிரட்டியவர் கைது

தொழிலாளர்களை மிரட்டியவர் கைது


ADDED : அக் 07, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு இடையன்காட்டு வலசு வி.எஸ்.பி.தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி சுதன், 38; இவருக்கு சொந்தமான வீடு, கட்டடத்தை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வி.எஸ்.பி., தியேட்டர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது.

அப்போது சாலை அமைக்கும் தொழிலாளர்களிடம், தன் வீட்டு பகுதியில் சாலை அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் மழை காலத்தில் மழை நீர் தேங்கி விடும் என்று கூறியுள்ளார். ஆனாலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனால் கத்தியை எடுத்து வந்து தொழிலாளர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசில் புகார் தரப்பட்டது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us