/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்
/
ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்
ADDED : ஜூலை 29, 2025 01:35 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் மீது, வட மாநில தொழிலாளி ஒருவர், நேற்று மாலை நடந்து சென்றவர் திடீரென ஆற்றில் குதித்து விட்டார். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ டிரைவர் அப்துல் பஷீர், ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்த நபரை மீட்டு, தடுப்புச்சுவர் அருகில் நிற்க வைத்தார். இதைப் பார்த்த மக்கள் சத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், ஆசாமியை கயிறு கட்டி மீட்டனர். ஆற்றில் குதித்த தொழிலாளி பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரத்தீர், குடிபோதையில் குதித்ததும் தெரிய வந்தது. ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை, தீயணைப்பு நிலைய வீரர்கள் பாராட்டினர்.