/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறைச்சி கடைக்காரரை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு
/
இறைச்சி கடைக்காரரை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு
இறைச்சி கடைக்காரரை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு
இறைச்சி கடைக்காரரை கொன்ற தொழிலாளி சிறையில் அடைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:32 AM
பு.புளியம்பட்டி,  பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகரை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் முருகேசன், 49. இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் வெள்ளியங்கிரி, 34, என்பவர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்தார். இதையடுத்து, வெள்ளியங்கிரி அரிவாளுடன் பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: சம்பவம் நடந்தபோது முருகேசன், வெள்ளியங்கிரி இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் முன் விரோதம் இருந்த நிலையில், வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், வெள்ளியங்கிரியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் குறித்து முருகேசன் தவறாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, அரிவாளை எடுத்து வந்து முருகேசனை துரத்தி துரத்தி தலை, தோளில் பயங்கரமாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரையும் மிரட்டி துரத்தியுள்ளார். தலையில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்து தப்பி பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளியங்கிரி சரணடைந்தார். இவ்வாறு கூறினர்.
இதையடுத்து வெள்ளியங்கிரியை கைது செய்த போலீசார், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.

