ADDED : மே 12, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டிபுன்செய்புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் சாலை கண்ணப்பர் மஹால் எதிர்புறம், தரைப்பாலத்துக்கு அடியில், 40 வயதுள்ள ஆண் சடலம் கிடப்பதாக புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில் மாதம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் மோகன்ராஜ், 38, தொழிலாளி என்பது தெரிந்தது. திருமணமாகாத நிலையில் மது போதையில் சுற்றி திரிந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு தரைப்பாலத்தின் அருகே மது அருந்தியபோது விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
