தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்


ADDED : நவ 18, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி,கவுந்தப்பாடி அருகே பெருமாபாளையம் குடியிருப்பை சேர்ந்தவர் பிரபாகரன், 36, கட்டட தொழிலாளி; மனைவி, மகன், மகளுடன் தென்னங்கீற்றுடன் கூடிய தகர சீட் வேய்ந்த குடிசையில் வசிக்கிறார்.

தம்பதியர் நேற்று காலை வேலைக்கும், மகன், மகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் காலை, 9:00 மணிக்கு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும் குடிசை மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக, கவுந்தப்பாடி போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us