சென்னிமலை யூனியன் ஆபீசை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
சென்னிமலை யூனியன் ஆபீசை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
UPDATED : அக் 30, 2026 06:30 AM
ADDED : அக் 30, 2026 06:19 AM

சென்னிமலை:சென்னிமலை
யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை
திட்டத்தில், 250 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணித்தள
பொறுப்பாளரான பூங்கொடி மீது புகார் எழுந்த நிலையில், நேற்று சஸ்பெண்ட்
செய்யப்பட்டார். இதையறியாமல் நேற்று வேலைக்கு சென்ற, 130-க்கும்
மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, மதியம் வரை வருகைப்பதிவு
செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், யூனியன்
அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சஸ்பெண்ட் பூங்கொடியை மீண்டும் பணியமர்த்தி, வருகைப்பதிவை
மேற்கொள்ள
வலியுறுத்தினர். சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவகுமார்
தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
சுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக மாற்று பொறுப்பாளர்
நியமிக்கப்பட்டு அனைவருக்கும் வருகைப்பதிவு முறையாக
கணக்கிடப்படும் என உறுதியளிக்கவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து
சென்றனர்.
