புதைவட மின் கேபிளில் பழுது போராடி சரி செய்த ஊழியர்கள்
புதைவட மின் கேபிளில் பழுது போராடி சரி செய்த ஊழியர்கள்
ADDED : மே 18, 2026 01:53 AM
ஈரோடு:ஈரோடு,
ஈ.வி.என்.ரோட்டில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கிருந்து புதை வடமாக அமைக்கப்பட்ட மின் கேபிள் மூலம் இடையன்காட்டு வலசு,
வீரப்பன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், 12
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், 33 கே.பி., திறன் கொண்ட மின் கேபிளில் நேற்று முன்தினம்
மாலை பழுது ஏற்பட்டதால், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு
உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதிகாரிகள் வேறு கேபிள்
மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணைப்பு வழங்கினர். பழுது ஏற்பட்ட
இடத்தை நவீன தொழில் இயந்திர உதவியுடன் தேடியபோது, மேட்டூர் சாலையில்
பழுதாகி இருப்பது தெரியவந்தது. ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி மின் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று
முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தொடங்கிய பணி, நேற்று மதியம், 12:00
மணிக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து மீண்டும் மின் இணைப்பு
வழங்கப்பட்டது. அதாவது, 14 மணி நேரம் போராடி புதைவட மின் கேபிள்
பழுதை, ஊழியர்கள் சரி செய்துள்ளனர்..
