ADDED : செப் 09, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், தாளவாடி அருகேயுள்ள சூசைபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 41; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளதால் மனைவி ஜோன் பிரபாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வது வழக்கம்.
இதேபோல் கடந்த, 5ம் தேதி தகராறு செய்தவர், 7ம் தேதி மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் பூச்சி மருந்து வாசனை அடிக்கவே மனைவி கேட்டுள்ளார். பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியதால், தாளவாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அன்றிரவே இறந்தார். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.