/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா ஆயுர்வேத கல்லுாரியில் உலக பூமி தின கருத்தரங்கம்
/
நந்தா ஆயுர்வேத கல்லுாரியில் உலக பூமி தின கருத்தரங்கம்
நந்தா ஆயுர்வேத கல்லுாரியில் உலக பூமி தின கருத்தரங்கம்
நந்தா ஆயுர்வேத கல்லுாரியில் உலக பூமி தின கருத்தரங்கம்
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
ஈரோடு : ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துமனையில், உலக பூமி தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான கருத்தரங்கு நடநத்து.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில், இரண்டு நாட்கள் கொண்ட கருத்தரங்கை, அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன், துவக்கி வைத்தார். பாலக்காடு இந்திய பாராம்பரிய மருத்துவ மைய தலைவர் அஜயன் சதானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் நிலைத்தன்மை தலைப்பில் பேசினார்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில் கேரளாவின் ஆதிவாசி கோத்ரவர்த வம்ஷேய சமிதி உறுப்பினர் மல்லன் கனி, ஆராய்ச்சி உதவியாளர் பவித்ரா ஆகியோர், மருத்துவ குணம் கொண்ட பூக்களின் வகை, அதன் முக்கியத்துவங்களை காணெலிக் காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கினர். இதை தொடர்ந்து கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், வெள்ளோடு சரணாலய பகுதியில் களப்பணி மேற்கொண்டனர்.

