தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உலக பழங்குடியினர் தினவிழா

உலக பழங்குடியினர் தினவிழா

உலக பழங்குடியினர் தினவிழா


ADDED : ஆக 10, 2024 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: கடம்பூரில் செயல்பட்டு வரும் பரண் டிரைபல் சொசைட்டி மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்கம் சார்பாக, உலக பழங்கு-டியினர் தினம் கொண்டாடப்பட்டது.கடம்பூர் பஸ் ஸ்டாண்டில், பழங்குடி ஊராளி பெண்கள் இணைந்து தங்களின் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து நடனம் ஆடி விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு போதை பொருட்களுக்கு எதி-ராக உறுதிமொழி வாசிக்கப்பட்டு, பேரணியாக சென்று தொன் போஸ்கோ மைதானத்தில் முடிவு பெற்றது.

ஈரோடு மாவட்ட தாட்கோ மேலாளர் அர்ஜூன்,' பழங்குடி மக்-களுக்கான தொழில் வாய்ப்புகளை அவர்கள் எவ்வாறு பயன்ப-டுத்திக் கொள்ள வேண்டும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்தும்' பேசினார். தொன் போஸ்கோ மாநில திட்ட வளர்ச்சி இயக்குனர் வசந்த் 'போதை பொருட்களால் ஏற்-படும் அழிவுகள் குறித்து' விளக்கினார்.

ஏற்பாடுகளை, பரண் டிரைபல் சொசைட்டி இயக்குனர்கள் உதய பிரகாஷ், கென்னடி ஆகியோர் தலைமையில் பணியா-ளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us