நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை : சென்னிமலை அரசு சுகாதார நிலையத்தில், உலக மலேரியா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
டாக்டர் குமார் தலைமையில், பொறுப்பு மருத்துவ அலுவலர் பவித்ரா, பல் மருத்துவர் திருநாவ் ஆகியோர் மலேரியா பற்றியும், நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கினர். சுகாதார ஆய்வாளர்கள் அர்ஜுன மூர்த்தி, கமலேஷ், அருண் மற்றும் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர், மக்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மலேரியா காய்ச்சலை தடுப்பது குறித்த துண்டு பிரசுரமும் வழங்கினர்.

