/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு
/
பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு
பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு
பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு
ADDED : மார் 25, 2024 07:09 AM
ஈரோடு : ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில், நடப்பாண்டு பொங்கல் விழாவில், நேற்று முன்தினம் நள்ளிரவில், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய மூன்று கோவில்களிலும், கம்பம நடும் நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல், பெரிய மாரியம்மன் கோவிலில் பெண்கள், சிறுமியர் என பல தரப்பினரும், வரிசையில் காத்திருந்து, கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். வரும், 28ம் தேதி பொங்கல் விழா கொடியேற்றம், ஏப்., 2ம் தேதி அதிகாலை காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் ஏப்., 3ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இறுதி நிகழ்வான கம்பம் ஊர்வலத்துடன் கூடிய மஞ்சள் நீராட்டு, ஏப்., 6ம் தேதி நடக்கிறது.