/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலை கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
/
பச்சைமலை கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : ஏப் 14, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பச்சைமலை முருகன் கோவில் பங்குனி உத்திரத்தேர்த்திருவிழா கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 10ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், நேற்று முன்தினம் சண்முகர் மலர் பல்லக்கில் நகர் வலம் என நடந்தது.
இதையடுத்து நேற்று காலை யாகசாலை பூஜையை தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து தெப்பத்திருவிழா, கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுக்கு வந்தது.

