/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஏ.ஆர்.ஓ.,விடமும் மனுத்தாக்கல் செய்யலாம்'
/
'ஏ.ஆர்.ஓ.,விடமும் மனுத்தாக்கல் செய்யலாம்'
ADDED : ஜன 11, 2025 02:38 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்னும், 2 நாட்-களே வேட்பு மனுத்தாக்கலுக்கு வாய்ப்புள்ளதால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் (ஏ.ஆர்.ஓ.,) மனுதாக்கல் செய்யலாம், என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் மணீஷ் தெரிவித்தார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் துவங்கி, 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அடுத்து, 13, 17 ஆகிய தேதிகளில் மதியம், 3:00 மணி வரை தாக்கல் செய்-யலாம்.இதுவரை, அரசு கட்டடங்கள், பொது இடங்கள், தனியார் இடங்களில் உள்ள விளம்பரங்கள், அகற்ற வேண்டியவற்றை அகற்றிவிட்டோம். கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு இதுவரை, 42 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். நேற்று முன்தினம், 1 லட்சம் ரூபாய், நேற்று, 1.80 லட்சம் ரூபாய் என, 2.80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை, மாவட்ட கருவூலத்தில் செலுத்தி உள்ளோம். இன்னும், 2 நாட்-களே வேட்பு மனுத்தாக்கலுக்கு உள்ளதால், முன்னேற்பாடு செய்-துள்ளோம். மனுவை பரிசீலித்தே, தாக்கல் செய்ய அனுமதிக்-கிறோம். தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என யாரிடம் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். பிரச்னை வராது. இவ்வாறு கூறினார்.