ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில் வீதி எம்.ஜி.ஆர்., நகர் முகமது நசீம் மகள் நஸ்சீமா பானு, 26; இவரின் கணவர் கரூரை சேர்ந்த ஆசிக் இலாஹி.
தம்பதிக்கு ௨ வயதில் மகன் உள்ளார். கோபியில் கூரியர் கம்பெனியில் ஆசிக் பணியாற்றி வருகிறார். கடந்த, 30ம் தேதி மதியம் வீட்டில் நஸ்சீமா பானு துாக்கிட்டு கொண்டார். குழந்தை அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது துாக்கிட்டு கொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாவுக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.