ADDED : ஜூன் 06, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,  தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலத்தை சேர்ந்த கிட்டுச்சாமி மகள்  வர்ஷா, 21; தனியார் இன்ஜனியரிங் கல்லுாரியில் படித்தார். படிக்க விருப்பமில்லாததால், இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தார். தாயார் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
வீட்டுக்குள் சேலையால் துாக்கிட்ட நிலையில் தொங்கியபடி இருந்த மகளை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இளம்பெண் சாவுக்கான காரணம் குறித்து, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

