ADDED : ஜூலை 27, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி
அருகே வேலம்பாளையத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உத்திரசாமி,
46; இவரின், 18 வயது மகள், பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவ
படிப்புக்காக வெளிநாடு செல்ல தயாராக இருந்தார். இதற்காக வைத்திருந்த
பணத்தில் ஐந்து லட்சம் ரூபாயை, நண்பரின் அவசர செலவுக்காக
உத்திரசாமி கொடுத்திருந்தார்.
இதுகுறித்து மனைவி அவரிடம்
கடந்த, 25ல் வாக்குவாதம் செய்தார். அப்போது மகளும், தனது படிப்புக்காக
வைத்திருந்த பணத்தை, ஏன் கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார். பெற்றோர்
பேசிக்கொண்டிருந்த சமயத்தில், வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டு
துாக்கிட்டு கொண்டார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி
கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
