கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை வாலிபருக்கு காப்பு
கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை வாலிபருக்கு காப்பு
ADDED : செப் 10, 2026 06:33 AM
அந்தியூர்:அந்தியூர்
அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான, 20 சி எண் கொண்ட அரசு
டவுன் பஸ், நேற்று மாலை, 4:00 மணிக்கு கோபியிலிருந்து
வெள்ளித்திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
டிரைவராக
குணசேகரன், 49, கண்டக்டராக சரவணன், 58, இருந்தனர். அந்தியூர் அருகே
குப்பனாங்கரடு என்ற இடத்தில் சென்றபோது, பஸ்சில் பயணித்த கோபியை
சேர்ந்த பெருமாள், 25, என்பவர், மது போதையில் தள்ளாடியபடி ரகளையில்
ஈடுபட்டார். அவரை பஸ்சிலிருந்து இறங்குமாறு கண்டக்டரும்,
டிரைவரும் அறிவுறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த அவர் கண்டக்டர்
சரவணனை மூக்கில் குத்தி காயம் ஏற்படுத்தினார். தடுக்க வந்த, டிரைவர்
குணசேகரனை தள்ளிவிட்டதில், இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து,
போதை வாலிபரை அந்தியூர் போலீசிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த
இருவரும், அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போதை
வாலிபர் பெருமாளை போலீசார் கைது செய்தனர்.
