ADDED : நவ 12, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பவானி, கீரக்கார தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகன் தமிழரசன், 25. இவர் மீது ஈரோடு தாலுகா, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
கடைசியாக, பவானி போலீசார் திருட்டு வழக்கில் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என, ஈரோடு எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.ஈரோடு கலெக்டர் கந்தசாமி, பரிசீலனை செய்து தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தர
விட்டார். இதன்படி, கோவை மத்திய சிறையில் உள்ள தமிழரசனுக்கு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டது.
