ADDED : ஏப் 24, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ், 24; கடந்த, 22ம் தேதி கருங்கல்பாளையம் வைராபாளையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார். கருங்கல்பாளையம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்து, 30 வலி நிவாரணி மாத்திரை இருந்தது. அவற்றை போதைக்கு பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, சந்தோஷை கைது செய்தனர்.
