ADDED : ஜூன் 04, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் மில் வீதியை சேர்ந்த குமார் மகன் சக்திவேல், 24. ராஜாஜிபுரம் குப்பக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நின்றிருந்தார்.
அங்கு
வந்த ஈரோடு மதுவிலக்கு போலீசார், அவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 200 கிராம் கஞ்சா இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் அவரை
கைது செய்தனர்.
