எஸ்.பி., அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிப்பு முயற்சி
எஸ்.பி., அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிப்பு முயற்சி
ADDED : ஏப் 06, 2026 05:49 AM

ஈரோடு:கவுந்தப்பாடி
பழனிச்சாமி வீதியை சேர்ந்தவர் தினேஷ், 31, போட்டோகிராபர். இவர்
மனைவி சந்தியா, 25; தம்பதிக்கு ஐந்து வயதில் மகன், 11 மாதத்தில் பெண்
குழந்தை உள்ளது.
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு தினேஷ், தன்
குடும்பத்துடன் கவுந்தப்பாடியில் இருந்து ஸ்கூட்டரில், நேற்று காலை
வந்தார். அலுவலகம் முன்புறம் ஸ்கூட்டரை நிறுத்தி, இரண்டு லிட்டர்
மண்எண்ணெய் கேனை எடுத்து, தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
குழந்தைகள் மீதும் எண்ணெய் தெறித்தது. இதைப்பார்த்த பெண் போலீசார்,
எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பிறகு
விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
விசாரித்த பிறகு, நால்வரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தனது
உறவுக்கார பெண், பாலியல் தொழில் செய்வதாக, ஓராண்டாக கவுந்தப்பாடி
போலீசில், தினேஷ் புகாரளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும்
புகாரளித்த நிலையில், இருதரப்பினரையும் போலீசார், இன்று (நேற்று)
ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளனர். பெண் தரப்பினர் ஸ்டேஷனுக்கு சென்ற
நிலையில், தினேஷ் எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க
முயன்றுள்ளார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
