ADDED : ஏப் 06, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சிவகிரி:சிவகிரி அருகே காகம், கனகம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ரவி மகன் அசோக், 21; திருமணம் ஆகாதவர். ஒன்றரை ஆண்டாக குடிப்பழக்கம் இருந்தது. தாய் மாரியம்மாள் கண்டித்தும் பலனில்லை. கடந்த, 3ம் தேதி காலை மது குடிப்பது தொடர்பாக மாரியம்மாள் கண்டித்து விட்டு, தண்ணீர் பிடிக்க சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்தபோது வீடு தாழிடப்பட்டிருந்தது.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓலையை பிரித்து உள்ளே சென்றபோது, அசோக் துாக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சிவகிரிபோலீசார் விசாரிக்கின்றனர்.
