ADDED : செப் 22, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
பவானி; நசியனுார் அருகே மேற்கு புதுாரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 30; கார் பெயிண்டர். செவ்வாய் தோசம் இருந்ததால் திருமணம் தள்ளி போயுள்-ளது.
இதனால் மன வேதனையில் இருந்தார். இரு தினங்களுக்கு முன் வேலைக்கு சென்று விட்டு, மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்-தினம் வீட்டு ஆங்கிளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் விசா-ரிக்கின்றனர்.
