/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு; டிரைவர் கைது
/
அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு; டிரைவர் கைது
ADDED : அக் 07, 2025 01:33 AM
சேலம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், மூன்று தியேட்டர் பின்புறம் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வாலிபர் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக, அங்கிருந்தவர்கள் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அரசு பஸ் வாலிபர் மீது மோதியது தெரியவந்தது. இதையடுத்து எருமாபாளையம் பணிமனையில் சென்று விசாரணை நடத்தியதில், கோவைக்கு பயணிகளை இறக்கி விட்டு, அரசு பஸ் பணிமனை வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர், குகை, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த ஜினோத்குமார், 22, என தெரியவந்தது. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர் செல்வராஜ், 50, என்பவரை போலீசார் கைது செய்தனர்.