ADDED : மே 16, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி அருகேயுள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 27; பெருந்துறையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்தார்.
கடந்த, 6ம் தேதி அதே பகுதியில் பனை மரத்தில் நுங்கு பறிக்க, 40 அடி உயர மரத்தில் ஏறியுள்ளார். நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரின் தந்தை விநாயகமூர்த்தி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
