/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
/
கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : அக் 09, 2025 01:41 AM
ஈரோடு, ஈரோட்டில், மது குடிக்க பணம் தராததால், தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 40. திருமணமாகவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வந்த அவர், வீரப்பன்சத்திரத்தில் அட்டை தயாரிப்பு ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த செப்., 7ல் விஜயகுமார், மது குடிக்க ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
விஜயகுமார் கையில் பணம் நிறைய வைத்திருந்ததை பார்த்து, அங்கிருந்த கருங்கல்பாளையம் திருநகர் காலனியை சேர்ந்த மாணிக்கம் மகன் சுகீர்தன், 21, ராஜா மகன் முகேஷ், 22, குமார் மகன் செல்வராஜ், 22, ஆகியோர் விஜயகுமாரிடம் பேச்சு கொடுத்து, அவரது பணத்தில் மது வாங்கி குடித்தனர். தொடர்ந்து போதை ஏறியதும், கூடுதலாக மது வாங்கி தரும்படி விஜயகுமாரிடம் மூவரும் கூறியுள்ளனர். விஜயகுமார் மறுத்து அங்கிருந்து வெளியேறினார். ஆத்திரமடைந்த மூவரும் விஜயகுமாரிடம் தகராறு செய்து தாக்கினர். விஜயகுமார் அங்கிருந்து ஓடியபோது, அவரை துரத்தி சென்று சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டு, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். ஈரோடு டவுன் போலீசார் சுகீர்தன், முகேஷ், செல்வராஜ் ஆகிய மூவரை கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதில் கைதான சுகீர்தன், தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி இதையேற்று, சுகீர்தனை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டார்.
பின்னர், சுகீர்தனை குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்து, கோபி சிறையில் இருந்து ஈரோடு டவுன் போலீசார், கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.