ADDED : ஆக 12, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே வெள்ளாளபாளையத்தில், ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி
செல்வதாக, சிலர் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்
நேற்று மாலை 4:30 மணிக்கு வெள்ளாளபாளையத்தில் ஒரு வேனை
மடக்கியபோது, அதிலிருந்த இருவரில் ஒருவர் தப்பி ஓடினார். பிடிபட்ட
நபரை, சிக்கிய 16 மூட்டைகளில் இருந்த, 800 கிலோ ரேஷன் அரிசியை
கைப்பற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் கோபி அருகே
அளுக்குளியை சேர்ந்த, ரமேஷ்குமார், 36, என்பது தெரிந்தது.
ரமேஷ்குமார், பறிமுதல் செய்த ரேஷன் அரிசி, வாகனம், ஈரோடு மாவட்ட உணவு
கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கோபி
போலீசார் தெரிவித்தனர்.
