எஸ்.சி, -எஸ்.டி., குறு, சிறு தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
எஸ்.சி, -எஸ்.டி., குறு, சிறு தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 23, 2026 06:02 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் எஸ்.சி, -எஸ்.டி., குறு, சிறு தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி தச்சூர் தனியார் மண்டபத்தில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. சென்னை தேசிய பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மையம் நடத்திய நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புகள், அரசு துறை ஒப்பந்தங்களில் பங்கேற்பது. அரசின் இ-மார்க்கெட் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தொழில் முனைவோருக்கான உதயம் சான்றிதழ் இலவசமாக பதிவு செய்யப்பட்டது. என்எல்சி., எஸ்ஏஐஎல், பிஎச்இஎல், எப்சிஐ ஆகிய நிறுவனங்களில் ஒப்பந்தப்பள்ளி டெண்டர் வாய்ப்புகள், தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், இ-மார்க்கெட் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உதயம் மற்றும் ஜி.இ.எம்., சான்றிதழ்கள் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மைய முதுநிலை கிளை மேலாளர் பிரசாத், தலைவர் நவநீதசிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
