/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பூஜை
/
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பூஜை
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பூஜை
மகா சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பூஜை
ADDED : ஜன 15, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : நீலமங்களத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
போகி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்களம் விநாயகர், மகா சக்திமாரியம்மன், கெங்கையம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு நேற்று மாலை சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது.
உலக நன்மை வேண்டி, நடந்த பூஜைகளைத் தொடர்ந்து சப்பரத்தில் உற்சவர் விநாயகர், மகாசக்தி மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் சுவாமிகளை எழுந்தருளச் செய்தனர். பின், தேரோடும் வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது.