/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர்
/
நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர்
நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர்
நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர்
ADDED : ஆக 17, 2024 03:30 AM

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூரில் அரசின் நவீன அரிசி ஆலையை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அரகண்டநல்லூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கினை பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்கள் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரகண்டநல்லூர் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் குறித்த பதிவேடு, பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் பழனி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சுவர்ண லட்சுமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.