/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடைக்கல அன்னை ஆலய அலங்கார தேர் பவனி ஊர்வலம்
/
அடைக்கல அன்னை ஆலய அலங்கார தேர் பவனி ஊர்வலம்
ADDED : மே 02, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அடுத்த விரியூரில் அடைக்கல அன்னை ஆலய அலங்கார ஆடம்பர தேர்பவனி ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூரில் புகழ்பெற்ற அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய அலங்கார ஆடம்பர தேர்பவனி ஊர்வலம் நேற்று முன் தினம் 30ம் தேதி இரவு துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அடைக்கல அன்னை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இந் நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை சின்னப்பன் தலைமை தாங்கினார். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் தேர் பவனி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

