/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
/
பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
ADDED : செப் 05, 2024 06:50 AM
உளுந்தூர்பேட்டை : டோல்கேட்டில் பேக்கரி கடை உரிமையாளரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த இரு இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் நவாஸ், 40; இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு கடந்த 31ம் தேதி இரவு 11 மணியளவில் மது போதையில் இரு இளைஞர்கள், 10 ரூபாய் பூஸ்ட் பாக்கெட் வெளியிலிருந்து வாங்கி வந்து பூஸ்ட் போட்டு தரும்படி கூறியுள்ளனர்.
ஆனால் டீ மாஸ்டரான காளீஸ்வரன், வெளியில் இருந்து பூஸ்ட் வாங்கி வந்தால் போட மாட்டோம், வேண்டுமென்றால் டீ போட்டு கொடுக்கிறோம் என டீ போட்டு கொடுத்துள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த இளைஞர்கள் டீ கிளாசை கீழே போட்டு உடைத்து கடை உரிமையாளரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நவாஸ் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தகராறில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டை தாலுகா செம்மணங்கூரை சேர்ந்த அவின்ராஜ, 19; கருப்பசாமி, 19; ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.