/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : செப் 16, 2024 06:57 AM

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
சங்கராபுரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆவணி மாதம் தேர் திருவிழாவை யொட்டி, கடந்த 1 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த வெள்ளிக் கிழமை பெண்கள் பால்குட ஊர்வலமும், ஊரணி பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
பின் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.