ADDED : ஜன 15, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி ; சின்னசேலம் அருகே தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி உண்ணாமலை, 75; கடந்த மாதம் 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் நடேசன் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.