/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் பொங்கல் விழா
/
எஸ்.பி., அலுவலகத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில் காவல் துறையினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் விழாவை உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அனைத்து காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் எனக்கூறி எஸ்.பி., வாழ்த்து தெரிவித்தார்.
ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., ரமேஷ், அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.