ADDED : ஜன 15, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வயிற்று வலியால் பெண், துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் மனைவி ராஜேஸ்வரி, 32; இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணியளவில் ராஜேஸ்வரி வயிறு வலிப்பதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.