/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு
ADDED : மார் 25, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரி வீல் சேரிலும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி 100 சதவீதம் மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மூடநீக்கியல் வல்லுனர் கருணாகரன் தலைமையில்30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

