/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு; 11ம் தேதி நேர்முகத் தேர்வு
/
108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு; 11ம் தேதி நேர்முகத் தேர்வு
108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு; 11ம் தேதி நேர்முகத் தேர்வு
108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு; 11ம் தேதி நேர்முகத் தேர்வு
ADDED : மே 08, 2024 11:31 PM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு செய்திக்குறிப்பு:
தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., - ஏ.என்.எம்., அல்லது லைப் சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக 16 ஆயிரத்து 20 ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல், டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 24 - 35 வயதிற்குள்ளும், 162.5 செ.மீ., உயரத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் தொடர்பான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். மாத ஊதியமாக 15 ஆயிரத்து 820 ரூபாய் வழங்கப்படும்.
நேர்முக தேர்வுக்கு வருவோர் அசல் மற்றும் நகல் கல்வித் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.