/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நா.த.க., நிர்வாகிகள் 11 பேர் கைது
/
நா.த.க., நிர்வாகிகள் 11 பேர் கைது
ADDED : மே 05, 2024 05:35 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் ரூ.100 கோடியில் சர்வதேச மையம் கட்ட அரசு முடிவு செய்துஉள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், ஆன்மிகஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆய்வு மையம் என்ற பெயரில் பெருவெளியை தி.மு.க., அரசு வலுகட்டாயமாக கையகப்படுத்துவதாகவும், கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் உட்பட சின்னசேலம் போலீஸ்ஸ்டேஷனில் 7 நபர்கள், கள்ளக்குறிச்சி போலீஸ்ஸ்டேஷனில் 3 பேர், சங்கராபுரத்தில் ஒருவர் என மொத்தமாக 11 நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.